Skip to main content

ஆப்பிளை மிஞ்சும் அமேசான்! கூடவே நிற்கும் கூகுள்,மைக்ரோசாஃப்ட்

Published on 05/08/2018 | Edited on 05/08/2018
amazon

 

 

 

ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 1 லட்சம் கோடி டாலரை தொட்டு தற்போது முதல் இடத்திலுள்ளது. ஆனால் அடுத்து ஒரு லட்சம் கோடி டாலரை எட்டும் அடுத்த நிறுவனம் எது என்ற கடும் போட்டி நிலவிவருகிறது.

 

அந்த அடிப்படையில் தற்போது ஆப்பிளுக்கும் அடுத்த இடத்தில் அமேசான் உள்ளது. அதன் சந்தை மூலதனம் 88,900 கோடி டாலர். இந்த பந்தயத்தில் மற்றோரு புகழ்பெற்ற நிறுவனமான கூகுள் ஆல்பாபெட் 85, 600 கோடி டாலரை சந்தை மூலதனமாக கொண்டு மூன்றாம் இடத்திலும், நான்காம் இடத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 83,000 கோடி டாலரை சந்தை மூலதனத்தை கொண்டுள்ளது.

 

இந்த கடும் போட்டியில் இரண்டாம் இடத்திலுள்ள அமேசான்தான் அடுத்து ஒரு லட்சம் கோடி டாலரை தொடக்கூடிய நிறுவனம் என அமெரிக்க பங்குசந்தை ஆய்வாரள்கள் குறிப்பிட்டுள்ளனர். அதேபோல் நடப்பு, 2018 - ஆண்டின் இறுதியில் அமேசானின் சந்தை மதிப்பு ஆப்பிளையும் மிஞ்ச வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

சார்ந்த செய்திகள்