Skip to main content

தீவிரவாத இயக்கத்திற்கு இந்தியாவில் இருந்து ஆட்களைச் சேர்த்த பெண் பிலிப்பைன்ஸ் நாட்டில் கைது

Published on 22/10/2017 | Edited on 22/10/2017
தீவிரவாத இயக்கத்திற்கு இந்தியாவில் இருந்து ஆட்களைச் சேர்த்த 
பெண் பிலிப்பைன்ஸ் நாட்டில் கைது

பிலிப்பைன்ஸ் நாட்டில் இயங்கி வரும் தீவிரவாத அமைப்பின் தலைவரான முகமது ஜபார் என்பவரின் மனைவி ஆயிஷா ஹமி என்பவர் சமூக வலைதளங்கள் மூலம் இந்தியா மற்றும் பிற நாடுகளில் இருந்து ஐஎஸ் தீவிரவாதத்துக்கு ஆட்களைச் சேர்த்து வந்துள்ளார். பிலிப்பைன்ஸ் போலீஸார், ஆயிஷா ஹமியை தீவிரமாக கண்காணித்து வந்தநிலையில், இந்தியா சார்பிலும் சில தகவல்கள் பகிரப்பட்டுள்ளன. இதனையடுத்து, ஆயிஷா ஹமியை பிலிப்பைன்ஸ் போலீஸார் கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து, ஆயிஷாவுடன் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, மேலும் பலர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

சார்ந்த செய்திகள்