Skip to main content

ஈரோட்டில் சோகம்; சாலையோரத்தில் இளைஞர் கழுத்தறுக்கப்பட்டுக் கொலை

Published on 30/10/2023 | Edited on 30/10/2023

 

youth was passed away strangulation near Erode

 

ஈரோடு பழனி நெடுஞ்சாலை ஓரத்தில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அடுத்த கண்ணம்மாபுரம் அருகே செல்லும், ஈரோடு - பழனி நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள காட்டுப் பகுதியில், இளைஞர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு, ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதாக, அப்பகுதி மக்கள் அறச்சலூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர். 

 

அந்தத் தகலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், உயிரிழந்து கிடந்த இளைஞரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இறந்தவர், கந்தன்காடு பகுதியைச் சேர்ந்த பெயிண்டிங் தொழிலாளி கார்த்தி என்பது தெரியவந்துள்ளது. 

 

இதனையடுத்து மோப்ப நாய் உதவியுடன் தடயங்களைச் சேகரித்த போலீசார், இறந்து கிடந்த கார்த்தி, தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளைஞர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்