Skip to main content

நடுரோட்டில் டிக்டாக் வீடியோ... ஓட்டுநர் செய்த காரியத்தால் அலறியடித்து ஓடிய இளைஞர்கள்!

Published on 06/02/2020 | Edited on 06/02/2020

தற்கால இளைஞர்கள் சமூக வலைதளங்களில் தீவிரமாக மூழ்கி கிடக்கிறார்கள். பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் போன்றவற்றில் அதிகம் நேரம் செலவழித்து வருகிறார்கள். இதை எல்லாவற்றையும் ஓவர்டேக் செய்யும் விதமாக தற்போது டிக்டாக் செயலி இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறது. அனைவரும் தங்களின் செல்போன்களில் அந்த செயலியை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகிறார்கள்.  அதில் பாடலுக்கு ஏற்ப இளைஞர்கள் வாயசைத்து சமூக வலைதளங்களில் அந்த வீடியோவை பதிவேற்றம் செய்து மகிழ்கிறார்கள்.

 


இதற்காக ஆபத்தான முறையில், ஆபத்தான இடங்களில் நின்று இளைஞர் வீடியோக்களை எடுக்கிறார்கள். இதே போன்று தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ ஒன்றில், ஆபத்தை உணராமல் இளைஞர்கள் வீடியோ எடுத்திருப்பது தெரியவந்துள்ளது. அதில் சாலையின் வளைவில் நின்று இரண்டு இளைஞர்கள் டிக்டாக் ஆப்பில் வீடியோ எடுத்து வருகிறார்கள். அப்போது விரைந்து வந்த பேருந்து ஒன்று அவர்கள் மீது மோதுவது போன்று வந்துள்ளது. இதனால் அவர்கள் அந்த இடத்தில் இருந்து எகிறி குதித்து ஓடியுள்ளனர். இது அனைத்தையும் அருகில் இருந்த அவரது நண்பர்கள் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வரைலாகி வருகின்றது.

 

சார்ந்த செய்திகள்