கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகில் உள்ளது அந்திலி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த கந்தன் என்பவர் இறந்துபோனார். அவரது இறுதி ஊர்வலம் நேற்று மாலை நடைபெற்றது. அப்போது அதே ஊரைச் சேர்ந்த வினோத்குமார் என்ற இளைஞர் இறுதி ஊர்வலத்திற்கு சுடுகாட்டுக்குச் செல்லும் போது இறந்தவருக்கு கொண்டுவந்த போடப்பட்ட மாலைகளை மினி டெம்போவில் ஏற்றிக்கொண்டு செல்லும்போது அந்த மாலைகளை வழிநெடுக மாலைகளை எடுத்து வீசிக்கொண்டு சென்றுள்ளார். அப்படி மாலை வீசி செல்லும்போது ஒரு மாலை அப்பகுதியில் இருந்த மின்சார லைனில் விழுந்து உள்ளது.
இதனால் அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இறந்து போன கந்தன் உடலை அடக்கம் செய்து விட்டு அனைவரும் வீட்டுக்கு திரும்பி வரும்போது அதே ஊர் மாரியம்மன் கோயில் அருகில் அதே பகுதியை சேர்ந்த பாரதி அவரது நண்பன் சேவி, செழியன், ராதாகிருஷ்ணன், எழுமலை ஆகிய நான்கு பேர்களும் சவ ஊர்வலத்தில் மாலையை வீசிச் சென்ற வினோத்குமாரிடம் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வினோத்குமார் கொண்டு வந்த மினி வேனின் முன்பக்க கண்ணாடியை உடைத்தனர். வினோத்குமாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து வினோத்குமார் அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்துள்ளார்.
அவரது புகாரின்பேரில் பாரதி உள்ளிட்ட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல் ராதாகிருஷ்ணன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் முத்துக்குமரன், வினோத்குமார், ரவிக்குமார், சண்முகம், நாகராஜ், கந்தன், முத்துக்குமரன், வெங்கடேஷ், கோவிந்தசாமி, பாலகுரு, ராயல் குமார், பிரபு உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சவ ஊர்வலத்தின்போது வீசப்பட்ட மாலையால் மின்தடை ஏற்பட்டு, மோதலின் காரணமாக இரு தரப்பிலும் கோஷ்டி மோதல் ஏற்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் திருக்கோவிலூர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.