எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி உருக்குலைந்த கூட்டணி என தமிழக பாஜக தலைவர் தமிழசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
இன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்கத்தின் முதலமைச்சருமான மம்தா பானர்ஜி தலைமையில் ஒருங்கிணைந்த இந்தியா என்று பெயரில் எதிர்க்கட்சிகளின் மாபெரும் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின்,
இந்தியாவின் இரண்டுவது சுதந்திர போராட்டத்திற்காக இந்த பொதுக் கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது. இங்கு கூடியிருக்கும் அனைவருக்கும் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதே அனைவரின் சிந்தனையும், அதற்காகத்தான் இங்கு கூடியிருக்கிறோம். இந்த பேரணியின் நோக்கமும் அதுதான். எதிரியே இல்லை என கூறி வந்த மோடி அண்மையில் எதிர்க்கட்சிகளை விமர்சிக்கிறார். நாம் ஒன்று சேர்ந்திருப்பதை பார்த்து நரேந்திர மோடி பயப்படுகிறார். அந்த பயத்தினால் ஏற்பட்ட கோபத்தால் அனைத்து எதிர்க் கட்சிகளையும் விமர்சிக்கிறார் மோடி என பேசியிருந்தார்.

இதனையடுத்து இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில்,
ஒருங்கிணைந்த இந்தியா என சொல்கிறார்கள். என்னைக்கேட்டால் உருக்குலைந்த கூட்டணி என சொல்வேன். உருப்பெற முடியாத கூட்டணி,கருவிலேயே கலைந்துபோகக்கூடிய கூட்டணி. அவ்வளவு பேர் மேடையில் உள்ளார்களே அவர்களிடம் யார் பிரதமர் வேட்பாளர் என்ற ஒரே ஒரு கேள்வியை கேளுங்கள். அதற்கு பதிலிருக்கிறதா? இந்த ஒற்றை கேள்விக்கு பதிலுள்ளதா என கூறினார்.