தோ்தல் நெருங்கி வருவதால், முடங்கிக் கிடந்த அரசின் நலத்திட்டங்கள், மீண்டும் புத்துயிர் பெற்று மக்களைச் சென்றடைய ஆரம்பித்துள்ளது. அதேபோன்று தமிழக அரசு, தனியார் நிறுவனங்களை அழைத்து, அந்த நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்புவதன் மூலம், ஓட்டு சேகரிப்பும் ஒரு புறம் நடந்துவருகிறது.
அதன் ஒருபகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூா் பகுதியில் அரசு சார்பில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில், 6,000-க்கும் அதிகமான இளைஞா்கள் பங்கேற்றனா். சுமார் 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் இருந்து பல்வேறு பணிகளுக்கான நேரடி தோ்வு நடைபெற்று, இதில் தோ்வு செய்யப்பட்டவா்களுக்குப் பணி ஆணை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சா் விஜயபாஸ்கா், திருச்சி மத்திய மண்டல ஐ.ஐி ஜெயராம், டி.ஐ.ஐி ஆனி விஜயா உள்ளிட்டோர் பங்கேற்றனா்.
இந்த நிகழ்வில், பணி ஆணை வழங்கும்போது அரங்கத்தில் கூடியிருந்தவா்களைப் பார்த்து ஐ.ஜி ஜெயராம், பணி ஆணை உங்களுக்குத் தானே வழங்கப்படுகிறது. ஏன் இவ்வளவு சோகமாக அமரந்திருக்கிறீா்கள்? பணி ஆணை பெறுபவா்களை உற்சாகப்படுத்திக் கைகளைத் தட்டுங்கள் என்று கூறியுள்ளார்.