Published on 05/09/2023 | Edited on 05/09/2023
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கிலோ 200 ரூபாய் என உச்சத்தில் இருந்த தக்காளி விலை தற்போது வரத்து அதிகரிப்பால் விலை குறைந்துள்ளது. தக்காளி விலை அதிகமாக இருந்த நேரத்தில் இதனால் ரேஷன் கடைகளில் தக்காளி விற்கும் அளவிற்குச் சென்றது.
தொடர்ந்து இது தொடர்பாக முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக தற்பொழுது தக்காளி விலை மிகச் சரிந்து கிலோ 7 ரூபாய்க்கு விற்பது விவசாயிகளுக்கு வேதனை அளித்துள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தக்காளி வரத்து அதிகரித்ததால் விலை குறைவாக விற்கப்பட்டது. இதனால் சில விவசாயிகள் தக்காளியைக் குப்பையில் கொட்டிச் சென்ற சம்பவம் அரங்கேறி உள்ளது. அதேபோல் மார்க்கெட் பகுதியிலேயே மாடுகளுக்கு உணவாகக் கொட்டிச் சென்ற நிகழ்வும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.