பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலைக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக, நுண்ணறிவுப் பிரிவுத் துறையினர் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில், அவருக்கு 'Y' பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, அண்ணாமலைக்கு மத்திய துணை ராணுவப் படையினர் என்றழைக்கப்படும் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பாதுகாப்பு அளிப்பார்கள். ஒன்று அல்லது இரண்டு கமாண்டோ வீரர்கள் உள்பட 11 பேர் அண்ணாமலைக்கு பாதுகாப்பு வழங்க உள்ளதாக தகவல் கூறுகின்றன.
ஏற்கனவே, அண்ணாமலைக்கு தமிழக அரசால் 'Y+' பிரிவுப் பாதுகாப்பு வழங்கப்பட்டு, அது கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னதாக 'X' பிரிவு பாதுகாப்பாகக் குறைக்கப்பட்டிருந்தது. இதற்கு அண்ணாமலை தனது ஆட்சேபத்தைத் தெரிவித்திருந்த நிலையில், மத்திய உள்துறை 'Y' பிரிவு பாதுகாப்பை வழங்கி உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.