இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மீனவர்குப்பம் கிராம மக்கள் அம்மனுக்கு வழிபாடு நடத்தி கடல் தாய்க்கு பாலாபிஷேகம் நடத்தினர்.
இதுபற்றி மீனவர் முனியசாமி, இலங்கை சிங்களப்படையிடம் இருந்து எங்களை காக்கவும், நாங்கள் மீன்பிடிக்கும் போது எங்கள் வலைகளை அறுத்தும், படகுகளை சேதப்படுத்தியும், மீனவர்களை அடித்தும் துன்புறுத்திருகின்றனர். எங்கள் மீனவர்கள் ஒவ்வொரு முறை மீன்பிடிக்க சென்றுவிட்டு திரும்பும் வரை மீனவ குடும்பங்கள் வருகைக்காக ஏக்கத்துடன் இருக்கின்றனர். இதிலிருந்து எங்களை தற்காத்து கொள்ளவும்,மீன்வளம் பெருகவும்,கடல் பயணம் சிறக்கவும் நாங்கள் இன்று கடல் தாய்க்கு வழிபாடு நடத்தினோம் என்றார். இதில் ஏராளமான மீனவ கிராமமக்கள் கலந்து கொண்டனர்.
அன்றே புரட்சி தலைவர்,மீனவ மக்களுக்காக ஒருநாள் போவார்,ஒரு நாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரமே என்று பாடினார். ஆனால் ஆண்டுகள் பலகடந்தும், ஆட்சிகள் பலமாறியும் மீனவர்கள் துயரம் தீராத பிரச்சனையாக உள்ளது என்றார்.
- பாலாஜி