









Published on 13/09/2019 | Edited on 13/09/2019
தமிழக அரசின் உணவுப் பாதுகாப்பு துறையும், நகர்ப்புற வாழ்வாதார இயக்கமும் இணைந்து, 'வாங்க ரசிக்கலாம்; ருசிக்கலாம்' என்கிற தலைப்பில், ' மதராசப் பட்டிணம் விருந்து' எனும் விழாவை இன்று தொடங்கி வருகிற 15-ந்தேதி வரை நடத்துகிறது. சென்னையின் பாரம்பரிய உணவுகளையும் அதன் பயன்பாடுகளையும் சென்னை மக்களிடம் அறிமுகப்படுத்தும் வகையில் பல்வேறு உணவு வகைகள் இவ்விழாவில் காட்சிபடுத்தப்பட்டுள்ளன. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பல அமைச்சர்கள் கலந்துகொண்டு உணவு விழாவை துவங்கிவைத்தனர். அரங்கில் வைக்கப்பட்டிருந்த கமர்கட், பொரி உருண்டை, உள்ளிட்ட தமிழக பாரம்பரிய உணவுகளை முதல்வரும், துணை முதல்வரும் சுவைத்து பாராட்டினர்.