இந்தியாவில் கரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. கடந்த ஆண்டை விட கரோனா பரவும் வேகம் தற்போது அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து பல்வேறு மாநிலங்கள் இரவுநேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.
தமிழகத்திலும் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் கரோனா பாதிப்பு அதிகரிப்பால் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை அதிகரிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் சிறப்பு காய்ச்சல் முகாம்களை அதிகரிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக சென்னையில் பாதிப்பு அதிகமாக இருக்கும் பகுதிகளில் கூடுதல் முகாம்கள் நடத்த மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையில் தினமும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக அண்ணாநகர், தேனாம்பேட்டை மண்டலங்களில் ஆயிரத்திற்கும் அதிகமாக கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை 2,57,851 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்னர்; 2,46,880 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இந்நிலையில், மீண்டும் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் பரிசோதனை செய்யும் பணியினை சென்னை மாநகராட்சி ஊழியர்கள் தொடங்கியுள்ளனர். இப்பணி கோட்டூர்புரம் குடிசைமாற்று வாரியக் குடியிருப்பில் தொடங்கி நடைபெற்றது.