Published on 21/08/2022 | Edited on 21/08/2022
கஞ்சா விற்பனை தொடர்பாக, பெண் ஒருவரை கைது செய்த காவல்துறை, அவரிடம் இருந்து 25 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தது.
தருமபுரி மாவட்டத்தில் போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்க, மாவட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் வினோஜ் தலைமையில், 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், சேலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், கஞ்சா பதுக்கி வைத்து சிறு வியாபாரிகளுக்கு விற்பனை செய்ததாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
அவரை கண்காணித்த காவல்துறையினர், பூசாரிப்பட்டியில் வைத்து பூங்கொடி என்ற அந்த பெண்ணை கைது செய்தனர். அவரிடம் இருந்து 25 கிலோ கஞ்சா பண்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மாவட்டம் முழுவதும் 74 பேரைக் கண்காணித்து வருவதாகவும், அவர்கள் அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.