வேலூர் மாவட்டம், இராணிப்பேட்டை நகர காவல்நிலையம் எதிரே புதன்கிழமை மாலை 5 மணியளவில் பரபரப்பாக இருந்தது. காவல்நிலையம் எதிரே நடந்து வந்துக்கொண்டுயிருந்த 45 வயது மதிக்கதக்க ஒரு பெண்மணியை, இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் சரமாரியாக வெட்டிவிட்டு தான் வந்த இருசக்கர வாகனத்திலேயே தப்பிவிட்டார். பட்டபகலில் சாலையில், காவல்நிலையம் எதிரே பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இந்த கொலை மக்களை அதிர்ச்சியடைய வைத்துவிட்டது.
பொதுமக்கள் அந்தயிடத்தில் கூடி உயிர் உள்ளதாக பார்த்தனர். துடிதுடித்து அவர் உயிர் பிரிவதை பொதுமக்கள் பார்த்து அதிர்ந்தனர். அந்த நேரத்தில் மழை பெய்ததால் ரத்தம் மழைநீரில் கரைந்து அந்த பகுதியே சிவப்பாக மாறியது.
இராணிப்பேட்டை போலீசார் மற்றும் ராணிப்பேட்டை டி.எஸ்.பி. கலைச்செல்வன் சம்பவயிடத்துக்கு வந்து உடனே சம்பவயிடத்துக்கு வந்து கொலை செய்யப்பட்டது யார்?. கொலை செய்தது யார்? என விசாரணை நடத்தியபோது, இராணிப்பேட்டை அடுத்த செங்காடு பகுதியை சேர்ந்தவர் சுகுணா. இவரது கணவர் இறந்துவிட்டார், தனக்கு ஆண் துணை வேண்டும்மென வாங்கூர் கிராமத்தை சேர்ந்த சுரேந்திரனுடன் பழக்கம் ஏற்பட்டு அங்கீகரிக்கப்படாத கணவன் - மனைவியாக வாழ்ந்துவந்துள்ளனர்.
ஜீலை 10ந் தேதி சுரேந்திரன், சுகுணாவிடம் குடிப்பதற்கு 1000 ரூபாய் கேட்டு உள்ளார். சுகுணா கொடுக்க மறுத்ததால் இருவருக்கும் சண்டை வந்து வாய் சண்டை அடிதடியாகியுள்ளது. சுகணாவை செங்கல் கொண்டு தாக்கி உள்ளார் சுரேந்திரன். அதனை தொடர்ந்து ஜீலை 11ந் தேதி சுகுணா ராணிப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் சுரேந்தர் மீது புகார் கொடுக்க வந்துள்ளார்.
இதனை அறிந்த சுரேந்திரன் இருசக்கர வாகனத்தில் வந்து காவல் நிலைய எதிரே சுகுணாவை கத்தியை கொண்டு சரமாறியாக வெட்டி கொலை செய்துவிட்டு சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இறந்த சுகுணாவின் சடலத்தை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. இது குறித்து ராணிப்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.