முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் தேக்கடி மதகுப் பகுதியில் காட்டு யானை ஒன்று எதிர்பாராத விதமாக சிக்கிக்கொண்டது. அதை மீட்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்ட நிலையில், யானை தானாகவே நீந்தி வந்து கரையைச் சேர்ந்தது.
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வரும் தண்ணீர் தேக்கடி ஏரியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு கால்வாய் வெட்டப்பட்டு, அந்த கால்வாய்கள் மூலம் தண்ணீர் தமிழகத்திற்கு வருகிறது. இந்த சூழலில் நேற்று இரவு 20 வயது மதிக்கத்தக்க காட்டு யானைனது தவறி கால்வாய்க்குள் விழுந்தது. இதனைத் தொடர்ந்து தமிழக நீர்வளத் துறையினர் யானையை மீட்பதற்காக கால்வாயில் நீரோட்டத்தை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.இதனால் தமிழகத்திற்குத் திறந்து விடப்படும் 1200 கன அடி தண்ணீரை நிறுத்தி உள்ளனர். தொடர்ந்து கால்வாயில் நீர் அழுத்தம் குறைந்தது. இதையடுத்து யானையானது கால்வாயில் இருந்து தானாக நீந்தி கரையேறி வனத்திற்குள் சென்றது.