
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த ஏழு நாட்களுக்கு மிதமான மழைக்கும் வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், சில நாட்களாகவே மாலை மற்றும் இரவு வேளைகளில் சென்னையில் மழை பொழிந்து வருகிறது. தற்போது சென்னை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், வடபழனி, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதேபோல் ஆவடி, அம்பத்தூர், திருமுல்லைவாயில், பூந்தமல்லி, திருவேற்காடு, அயப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பொழிந்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இரவு 11 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.