2022-2023ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் சட்டப்பேரவையில் தற்பொழுது துவங்கியது. வரும் நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறையைக் குறைப்பதற்கான திட்டங்கள் இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். திமுக ஆட்சி பொறுப்பேற்றதற்குப் பின்பு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இதுவாகும்.
பேரவை துவங்கி நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை வாசிக்கத் தொடங்கிய நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டது, எஸ்.பி வேலுமணி வீட்டில் ரெய்டு நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். கூச்சல் காரணமாக அமைதியாக இருக்கும்படி சபாநாயகர் அறிவுறுத்தியபோதிலும் அதிமுகவினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். பட்ஜெட் உரைக்கு முன் பேச வாய்ப்பளிக்காததால் இறுதியில் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.