அதிமுக கழக அம்மா பேரவை சார்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72 வது பிறந்தாள் விழா கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர், துணை முதல்வர் தலைமையில் இன்று நடைபெற்றது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.வின் பிறந்தநாள் விழா தமிழக முழுவதும் எப்படி நடத்தவேண்டும் என்பதை விளக்க, அம்மா பேரவை மாவட்ட நிர்வாகிகளை அழைத்து நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில், சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஜெ.வின் பிறந்தநாள் அனைத்து மக்களும் பாரட்டும் வகையில் கொண்டாட வேண்டும், ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ முகாம், ரத்ததான முகாம், மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள் என மாவட்ட முழுவதும் வழங்கப்பட வேண்டும்.
அதேபோல இந்த விழாவில் இலவச திருமணங்கள் நடத்திவைக்கப்படும். ஜெ.வின் புகழ் அழியா புகழாக நீடித்து நிலைக்க உறுதிமொழி ஏற்போம். அதேபோல ஜெ.வின் பிறந்த நாள் “இளைஞர் எழுச்சி நாளாக” கடைபிடிக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டடு கூட்டத்தை நிறைவு செய்தனர்
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாமின் நினைவைப் போற்றும் வகையில் அவரது பிறந்த தினம் இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்து அதன்படி கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்தநிலையில் தற்போது ஜெ.வின் பிறந்தநாள் இளைஞர்கள் எழுச்சி நாள் என்றால் அப்பொழுது அப்பதுல்கலாம் பிறந்தநாளை என்ன வென்று கொண்டாடுவது என சர்ச்சை எழுந்துள்ளது.