Skip to main content

வேட்பாளர் யார்?-அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஐ.யூ.எம்.எல்

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
nn

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அமைந்த கூட்டணி நீடிப்பதால் திமுக தொகுதிப் பங்கீடு வரை சென்றுள்ளது.  மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகியவை இன்று திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இரண்டு கட்சிகளும் ஒரு இடத்தை கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாகவே காங்கிரஸ், கம்யூனிஸ்ட், இந்திய முஸ்லிம் லீக், விசிக  ஆகிய கட்சிகள் திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தன.

இந்நிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ராமநாதபுரத்தில் (ஐ.யூ.எம்.எல்) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக யார் போட்டியிடுவார் என்று அதிகாரப்பூர்வமாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. ராமநாதபுரத்தில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் நவாஸ் கனிக்கே மீண்டும் போட்டியிட வாய்ப்பளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மனிதநேய மக்கள் கட்சிக்கும் திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கப்பட்டால் மகிழ்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்