Skip to main content

மனைவியின் உயிரை குடித்த செல்போன்!

Published on 09/12/2017 | Edited on 09/12/2017
மனைவியின் உயிரை குடித்த செல்போன்!

திருச்சி–திண்டுக்கல் சாலை சத்திரப்பட்டி அருகே உள்ள இனாம்மாத்தூர் ஊராட்சியை சேர்ந்தவர் வேலுச்சாமி (30). பிளம்பிங் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஐஸ்வர்யா (21). இவரது சொந்த ஊர் உத்தமர்சீலி. இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. குழந்தைகள் இல்லை. நேற்று முன்தினம் காலை வேலை விஷயமாக வேலுச்சாமி திருச்சிக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பினார்.

அப்போது ஐஸ்வர்யா செல்போனில் யாருடனோ பேசிக்கொண்டிருந்திருக்கிறார். யாரிடம் பேசிக்கொண்டிருக்கிறாய், என வேலுச்சாமி கேட்டதற்கு எனது அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தேன் என்று ஐஸ்வர்யா பதில் அளித்துள்ளார். அப்படியா சரி போனை கொடு என்று கேட்க ஐஸ்வரியாவே அவசர அவசரமாக பேசின நம்பரை அழித்து விட்டு தர இதை பார்த்து ஆத்திரப்பட்ட வேலுச்சாமிக்கும் மனைவி ஐஸ்வரியாவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

வேலுசாமி அடுத்த நாள் காலை எழுந்ததும், செல்போனில் ஐஸ்வரியாவின் அம்மா அப்பாவுக்கு தகவல் சொல்லி நீங்களே வந்து நியாயம் கேளுங்க என்று சொல்லி வரவழைத்திருக்கிறார். 

இது தொடர்பாக கணவன்–மனைவிக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை பார்த்த வேலுச்சாமியின் அண்ணன் இருவரையும் சமாதானம் செய்து வைத்தார். உங்க அம்மா அப்பா வரட்டும் இன்னைக்கு ஒரு வழி பண்றேன் என்று சொல்லிட்டு வேலுச்சாமி கடைத்தெரு பக்கம் சென்று விட்டார். கதவை தாழ்ப்பாள் போட்டுகொண்டு மின்விசிறியில் சேலையால் ஐஸ்வர்யா தூக்கு போட்டு கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அருகில் உள்ளவர்கள் ஓடி வந்து கதவை உடைத்து தூக்கில் தொங்கிய ஐஸ்வர்யாவை கீழே இறக்கி திருச்சியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், போகும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். பின்னர் அவரது உடலை வீட்டிற்கு கொண்டு வந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ராம்ஜிநகர் இன்ஸ்பெக்டர் முகமதுஇத்ரீஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஐஸ்வர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுபற்றி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 

தகவல் கேள்விபட்டு வந்த ஐஸ்வரியாவின் பெற்றோர் வரதட்சணை கொடுமையினால் என் மகளை டார்ச்சர் செய்து கொன்னுட்டாங்க என்று புகார் கொடுக்க ஐஸ்வர்யாவுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் மேல் விசாரணை நடத்தி வருகிறார். செல்போன் எண்ணை அழித்ததும், பெற்றோர் முன்னிலையில் நியாயம் கேட்பேன் என்று கணவன் சொன்னதும் இந்த தற்கொலைக்கு காரணம். 

அறிவியல் வளர்ச்சி மனிதனின் அசாத்திய சாதனை என்று நாம் சொல்லிக்கொள்கிறோம். ஆனால் அந்த அறிவியலை பயன்படுத்தும் நாம் அதை தவறான வழியிலே பயன்படுத்துகிறோம். அப்படி மனித வாழ்க்கையில் சூராவளிபுயல் அடித்துக்கொண்டிருப்பது தான் செல் போன் கலாச்சாரம். 

ஜெ.டி.ஆர். 

சார்ந்த செய்திகள்