Skip to main content

தமிழ்நாடு இலட்சினை எங்கே?; ரோசப்பட்டு வெளியேறுவார் என்று எதிர்பார்க்கலாமா? - சு. வெங்கடேசன் கிடுக்குப்பிடி

Published on 10/01/2023 | Edited on 10/01/2023

 

Where is the Tamilnadu address?; Can we expect  to leave?-S. Venkatesan

 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் நேற்று (09.01.2023) ஆளுநர் உரையுடன் துவங்கியது. இந்த பேரவை கூட்டத்தொடர் வரும் 13 ஆம் தேதி வரை நடைபெறும் என அலுவல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நேற்றைய நிகழ்வில் அரசு கொடுத்திருந்த உரையில் சில வார்த்தைகள் ஆளுநரால் தவிர்க்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் தமிழக முதல்வர் உரையாற்றிக்கொண்டிருக்கும் பொழுதே ஆளுநர் வெளியேறியதும் சர்ச்சையானது.

 

Where is the Tamilnadu address?; Can we expect  to leave?-S. Venkatesan

 

இந்நிலையில் ஆளுநரின் மீது மற்றுமொரு குற்றச்சாட்டை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் சமூக வலைத்தளம் மூலம் வைத்திருக்கிறார். சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், 'ஆளுநர் மாளிகையில் இருந்து சித்திரை விழாவுக்கு வந்த அழைப்பில் ‘தமிழ்நாடு ஆளுநர்’ என்று இருந்தது. இப்பொழுது பொங்கல் விழாவுக்கு வந்துள்ள அழைப்பில் ‘தமிழக ஆளுநர்’ என்று இருக்கிறது.

 

Where is the Tamilnadu address?; Can we expect  to leave?-S. Venkatesan

 

Where is the Tamilnadu address?; Can we expect  to leave?-S. Venkatesan

 

நேற்று அவையிலிருந்து வெளியேறிய அதே வேகத்தோடு மாநிலத்தைவிட்டு இவர் வெளியேற்றப்பட வேண்டும். கடந்த முறை வந்த அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலட்சினை இருந்தது. இந்த முறை வந்துள்ள அழைப்பிதழில் மூன்று இடங்களிலும் இந்திய அரசின் இலட்சினை மட்டுமே இருக்கிறது. நமது இலட்சினையில் தமிழ்நாடு என்று எழுதப்பட்டுள்ளதால் அதனைப் பயன்படுத்த மறுத்துள்ளார். இதேபோல தமிழ்நாட்டு மக்களின் வரிப் பணத்திலிருந்தும், வாடகை வீட்டிலிருந்தும் ரோசப்பட்டு வெளியேறுவார் என்று எதிர்பார்க்கலாமா?' எனப் பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்