Skip to main content

காவிரி மேலாண்மை வாரியத்தின் நோக்கமும் பணியும் என்ன ?

Published on 03/04/2019 | Edited on 03/04/2019

தமிழகம் கர்நாடகம் இடையே நீடித்து வரும் காவிரி நதிநீர்ப் பங்கீட்டிற்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மட்டுமே தீர்வாக பார்க்கப்படுகிறது. மத்திய நீர்ப்பாசனத் துறையின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய இந்த மேலாண்மைவாரியத்திற்கு ஒரு முழு நேர தலைவரையும்இரண்டு முழு நேர உறுப்பினர்களையும்மத்திய அரசு நியமிக்க வேண்டும்.

காவிரி நதி நீரை பங்கிட்டுக்கொள்ளும் தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி மற்றும்கேரளா ஆகிய மாநிலங்கள் தலா ஒரு உறுப்பினரை நியமிக்க வேண்டும். மேலாண்மை வாரியத்தில் விவாதிக்கப்பட்டு எடுக்கப்படும் எந்த ஒரு முடிவும் பெரும்பான்மை அடிப்படையிலானது.

 

cauvery



காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்ட நொடியிலிருந்து தமிழகத்தின் கீழ்பவானி, அமராவதி, மேட்டூர், கர்நாடகாவின் ஹேமாவதி, ஹேரங்கி, கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் கேரளாவின் பாணாசுரசாகர் ஆகிய அணைகள் காவிரி மேலாண்மை வாரியத்தின் ஒருங்கிணைந்த வழிகாட்டுதலின்படியே சம்பந்தப்பட்ட மாநில அரசுகளால் இயக்கப்பட வேண்டும்.

மேலாண்மை வாரிய உறுப்பினர்கள் விரும்பினால் எந்த ஒரு அணை, நீர்த்தேக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்ய முடியும். மேலாண்மை வாரியத்தின் பணிகளுக்கு சம்பந்தப்பட்ட மாநிலங்கள் ஒத்துழைக்க மறுத்தால் அவற்றின் மீது மத்திய அரசின் உதவியை கேட்க முடியும்.

 

சார்ந்த செய்திகள்