டெங்குகாய்ச்சலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? ஆட்சியரிடம் கேள்வி எழுப்பிய தி.மு.க எம்.எல்.ஏ.
புதுக்கோட்டை மாவட்டததில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் பாதிப்பால் சுமார் 75 பேர்கள் வரை இறந்தனர். அதன் பிறகு காய்ச்சல் வந்தாலே பொதுமக்களே விழிப்புணர்வு பெற்று சிகிச்சை எடுத்துக் கொள்ள தொடங்கினாலும் காய்சசல் இறப்பு தொடங்கி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 15 பேர் தற்போது வரை இறந்துள்ளனர்.
இந்த நிலையில் திருமயம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ரகுபதி (தெற்கு. மா.செ. பொருப்பு) இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் கணேஷை நேரில் சந்தித்து டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தி உயிர் பலிகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மனு வை கொடுத்ததுடன் அரசு இயந்திரம் மெத்தனமாக இருப்பதா்ல உயிர் பலிகள் அதிகமாக உள்ளது. அரசு மருத்துவமனைகளில் மருந்து இல்லை என்று எழுதிப்போடும் அவல நிலை கூட உள்ளது. மாவட்டம் முழுவுதும் ஆயிரக்கணக்கானோருக்கு காய்சல் பாதிப்பு உள்ளது. மருத்துவக்கல்லூரியில் எலிசா டெஸ்ட் எடுக்கப்படுவதில்லை என்று கூறினார். கேட்ட மாவட்ட ஆட்சியர் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எல்லாம் சீரமைக்கப்படும் என்றார்.
-இரா.பகத்சிங்