காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற சதீஷ்குமார் சிவலிங்கம் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
21ஆவது காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 77கிலோ பளுதூக்கும் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம், இந்தியாவின் சார்பில் களமிறங்கி, தங்கம் வென்று வெற்றிபெற்றார். நாட்டிற்கும், தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக சதீஷ்குமாரின் வெற்றி இருப்பதாகக் கூறிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டியிருந்தார். அதேபோல், தமிழக அரசின் சார்பில் அவருக்கு ரூ.50 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
மக்களின் அன்பும் ஆதரவும், என் தாய் திரு நாட்டிற்கான, என் தங்கம் வெல்லும் பயணத்தை எளிதாக்கியது. மக்களின் அன்பிற்கும் உற்சாகத்திற்கு பெரும் கடமை பட்டுள்ளேன். என் மனமார்ந்த நன்றி என் இனிய உறவுகளே. எந்நாளும், தமிழ் வெல்லும்! pic.twitter.com/6Xv963TGRk
— sathish kumar sivalingam oly (@imsathisholy) April 10, 2018
இந்நிலையில், தனது வெற்றியைக் கொண்டாடும், பாராட்டும் அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக சதீஷ்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மக்களின் அன்பும் ஆதரவும், என் தாய் திரு நாட்டிற்கான, என் தங்கம் வெல்லும் பயணத்தை எளிதாக்கியது. மக்களின் அன்பிற்கும் உற்சாகத்திற்கு பெரும் கடமை பட்டுள்ளேன். என் மனமார்ந்த நன்றி என் இனிய உறவுகளே. எந்நாளும், தமிழ் வெல்லும்!’ என பதிவிட்டுள்ளார்.