Skip to main content

பாரதத்துடனான தொடர்பை நாம் இழந்துவிட்டோம் - ஆளுநர் ஆர்.என். ரவி 

Published on 26/08/2023 | Edited on 26/08/2023

 

We have lost touch with Bharatham - Governor RN Ravi
கோப்புப் படம் 

 

கோவை பேரூரில் அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம் மற்றும் நொய்யல் அறக்கட்டளை இணைந்து நடத்தும் ஒரு வார நொய்யல் பெருவிழாவைத் திருமடத்தில் தொடங்கி வைத்துப் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, "காலனித்துவம் நாட்டு மக்களை இயற்கையாகவே துண்டித்து விட்டது" என்றுள்ளார்.

 

விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, “தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி” என உரையை துவங்கினார். அவர் பேசுகையில், “காலனித்துவத்தின் காரணமாக, இயற்கையுடனான உணர்வுப்பூர்வமான தொடர்பை இழந்து நாம் அந்நியர்களாகிவிட்டோம். மனிதர்கள் தான் படைப்பின் எஜமானர்கள் என்றும், எஞ்சிய படைப்புகள் எல்லாம் நம் மகிழ்ச்சிக்காக உருவாக்கப்பட்டவை என்றும் ஆங்கிலேயர்கள் நினைத்தனர். இது நாம் நம்பிவருவதற்கு  நேர் எதிரானது. அதில் இரண்டு எதிர் கருத்துக்கள் இருந்தன - ஒன்று நான் எஜமானன் எனவும் மற்றொன்று நானே எல்லோருக்கும் ஒருவன் என்றும் கூறுகிறது” என்று பேசினார்.  

 

மேலும், கவர்னர் உரையில் , “புதிய கல்வி முறையின் வழி ஆங்கிலேயர்கள் நமது நிறுவனங்களையும் மதிப்புகளையும் அழிக்க முயன்றனர். இந்த மோதலினால் காலப்போக்கில் தாழ்வு மனப்பான்மை உணர்வை அவர்கள் நம்மிடம் புகுத்தினார்கள். பின்னர் நாம் மேற்குலகங்களை தலைசிறந்ததாக பார்க்க ஆரம்பித்து விட்டோம்” எனவும் பேசினார்.

 

நமது இந்திய அரசியலமைப்புச் சட்டம் பாரதம் என்று தொடங்கினாலும், துரதிர்ஷ்டவசமாக பாரதத்துடனான தொடர்பை நாம் இழந்துவிட்டோம். சுதந்திரத்திற்குப் பின், நாடு காலனித்துவக்காரர்களின் வழியில் புதிய இந்தியாவாக உருவேடுத்தபின் இனம், மதம், பிரதேசம், மொழி, நாடு எனப் பிரித்து ஆரியம், திராவிடம் மற்றும் பல்வேறு இனங்களை உருவாக்கியவர்கள் அவர்களே எனவும் ஆளுனர் ஆர்.என். ரவி குறிப்பிட்டிருந்தார். 

 

 

 

சார்ந்த செய்திகள்