Published on 17/10/2018 | Edited on 17/10/2018

கடந்த மூன்று நாட்களாக தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நடத்திய ஸ்டிரெய்க் வாபஸ் பெறப்பட்டது.
நிலத்தடி நீர் எடுப்பதில் புதிதாக கொண்டுவந்த கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டி நடந்த போராட்டம் திரும்பப்பெறப்பட்டது. இந்த புதிய விதி நீதிமன்ற உத்தரவு என்பதால் அரசு ஒரு குழுவை அமைத்துதான் விசாரிக்க முடியும் எனக் கூறியுள்ளது. பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாவதால் வாபஸ் பெறுகிறோம், இது தற்காலிகமான வாபஸ்தான். இவ்வாறு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர் சங்க தலைவர் நிஜலிங்கம் தெரிவித்துள்ளார்.