இந்திய பொருளாதார சங்கத்தின் 101வது வருடாந்திர தேசிய மாநாடு வேலூரில் உள்ள தனியார் பல்கலைகழகமான விஐடியில் 27முதல் 29ந் தேதி வரை 3 நாள் நடைபெறுகிறது. இந்திய பொருளாதார சங்க மாநாட்டினை விஐடி சமூக அறிவியல்மற்றும் மொழிகள் பள்ளியின் வணிகவியல் துறை ஏற்பாடு செய்துள்ளது. மாநாட்டில் நாடு முழுவதிலுமிருந்து பொருளாதார நிபுணர்கள் பேராசிரியர்கள் ஆராய்ச்சி மாணவர்கள் என 1700 பேர் பங்கேற்றுள்ளனர்.
இதனை டிசம்பர் 27ந்தேதி காலை மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இதில் மாநாட்டின் சிறப்பு மலரினை கவர்னர் வெளியிட அதனை சங்கத்தின் தேசியதலைவரும் விஐடி வேந்தருமான விசுவநாதன் பெற்றுக்கொண்டார்.
மாநாடுதொடக்க விழா விஐடியில் உள்ள அண்ணா அரங்கில் நடைபெற்றது. மாநாடு தொடக்க விழாவிற்கு மாநாட்டின் தலைவரும் விஐடிவேந்தருமான டாக்டர் ஜி.விசுவநாதன் தலைமை வகித்து பேசியது: நாட்டின் 22 மாநிலங்களிலிருந்து பொருளாதாரம் சம்மந்தமானவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பொருளாதார வல்லுநர்கள் குழு பங்கேற்றிருப்பது நாட்டில் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும். பொருளாதார வல்லுநர்கள் நாட்டு மக்களின் வளர்ச்சிக்கான கண்களாக விளங்கி வருகின்றனர்.
130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா உலக மக்கள் தொகையில் 18 சதவிகித மக்கள் தொகையை பெற்றுள்ளது. உலக நிலபரப்பில் 2.5 சதவிகித நிலத்தினையும் 4 சதவிகித குடிநீர் வளத்தையும் பெற்றுள்ளது. நமக்கு நிலபரப்பும் குடிநீர் அளவும் போதாது இரண்டையும் பாதுகாத்து சேமிக்க வேண்டிய நிலையில் உள்ளோம். நாட்டில் குடியிருப்புகள் பெருக்கத்தின் காரணமாக வேளாண் விளைநிலங்கள் குடியிருப்புகளாக மாற்றப்பட்டு வருவதால் எதிர்காலத்தில் உணவு பற்றாக்குறை ஏற்படும்.
குடியிருப்புகள் அகலமாக அமைவதை விட உயரமாக பல மாடிகள் கொண்ட காட்டிடங்களாக அமைத்தால் நிலபரப்பு பயன்பாட்டை குறைக்கமுடியும். ஆண்டுக்கு ஒரு முறையோ அல்லது இரண்டு ஆண்டுக்கு ஒருமுறையோ மழை வரும் நிலையில் மழை நீரை நாம் சேமித்து பாதுகாக்க வேண்டும். தமிழ்நாட்டில் சுமார் 41,000 ஏரி குளங்கள் உள்ளன. இவைகள் சரியாக பராமரிக்கப்படாமல் உள்ளதால் மழைநீரை சேமிக்க முடியாமல் போகிறது. அதே போன்று மழைக்காலங்களில் காவிரி நீர் சுமார் 300 டிஎம்சி வீனாககடலில் கலக்கும் நிலை உள்ளது. இவற்றை நாம் தடுக்கவேண்டிய நிலையில் உள்ளோம்.
வளர்ந்த நாடுகளை எடுத்துக்கொண்டால் அந்த நாடுகளில் கல்வி மற்றும் சுகாதாரத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியே வளர்ச்சியடைந்ததர்க்கான காரணமாக உள்ளது. நாட்டில் கல்விக்காக ஒதுக்கும் நிதியின் அளவுமொத்த வருவாயில் 4 சதவிதம் மட்டுமே. இது வளர்ந்த நாடுகளை கானும்போது மிகக் குறைவாகும்.
கடந்த 70 ஆண்டுகளாக இதே நிலை உள்ளது. இதனை குறைந்தது 6 சதவிகித அளவிற்காகவது உயர்த்த வேண்டும். வளர்ந்த நாடுகளில் இதன் அளவு 7,8,9 சதவிகித அளவிற்கு உள்ளது. நாட்டில் உள்ளவர்களில் 55 சதவிகிதத்தினர் 25 வயது உடையவர்களாக உள்ளனர். இவர்களுக்கு உயர்கல்வி வழங்குவதின் மூலம் நாடு வளர்ந்தநாடாக மாறும்.
நாட்டில் உள்ளவர்களில் உயர்கல்வி பெற தகுதியுடையவர்களில் 75 சதவிகிதத்தினருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் உள்ளது. இது சரியான நேரம் இதில் மத்திய மாநில அரசுகள் கவனம் செலுத்தி கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். அதே போன்று நாட்டில் தனிநபர் வருவாய் ஆண்டுக்கு 2100 டாலராக உள்ளது. இது மிகவும் குறைவு சீனா போன்றநாடுகளில் தனிநபர் வருவாய் 10000 டாலர் அளவிற்கு உள்ளது. எனவே தனிநபர் வருவாய் உயர்வு கல்வி வேலை வய்ப்புக்கான வழிமுறைகளை இங்கு வந்துள்ள பொருளாதார வல்லுநர்கள் வழிகாண வேண்டும் என்ரறார்
நிகழ்ச்சியில் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சிறப்புவிருந்தினராக பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி மாநாட்டை தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் இந்திய பொருளாதார சங்கத்தின் வருடாந்திர மாநாட்டின் சிறப்பு மலரினை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட மாநாட்டின் தலைவர் விஐடி விசுவநாதன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து பொருளாதார வளர்ச்சியில் வர்த்தகம் என்ற நூலினை ஆளுநர் வெளியிட தன்யா சர்மா மற்றும் பேராசிரியர் தபன்குமார் சந்தாலியா பெற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஆளுநர் பேசும்போது, இந்திய பொருளாதார சங்கத்தின் 101 வது மாநாட்டில் பங்கேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்திய பொருளாதார சங்கம் கடந்த 100 ஆண்டுகளாக நாட்டில் மிகப்பெரிய சேவையை செய்துவருகிறது. முதல், இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டுகளில் இந்திய நாடு பொருளாதாரத்தில் வளர்ச்சி கண்டிருந்தது. காரணம் அந்த காலங்களில் இந்தியர்கள் வெளிநாடுகளுடம் மேற்கொண்ட வர்த்தகம் காரணமாக அமைந்தது. அதன் பிறகு ஆங்கிலயர் ஆட்சி காலத்தில் நாட்டில் உற்பத்தி குறைந்துபோனது.
ஆங்கிலேயர்கள் தங்கள் நாட்டு உற்பத்தி பொருட்களை வர்த்தகம் செய்யும் நிலையை உருவாக்கி ஆங்கில வர்த்தக மையமாக மாற்றிவிட்டனர். 1700ம் ஆண்டு வரை நாட்டில் பொருளாதார வளர்ச்சி 24.4 ஆக இருந்தது. 1947ல் 24.2 ஆக குறைந்தது. பின்னர் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பொதுத்துறை நிறுவனங்கள் வேளாண்மையில் ஈடுபட வளர்ச்சி ஏற்பட்டது.
நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி கொண்டுவந்துள்ள மேக் இன் இந்தியாதிட்டம் காரணமாக நாட்டில் உற்பத்தி துறைக்கு முன்னுரிமைவழங்கப்பட்டு இறக்குமதி குறைத்து ஏற்றுமதிக்குக்கு வழிவகைசெய்யப்பட்டுள்ளது. அதேபோன்று உலகில் தாரளமயமாக்கல் வந்த பிறகு உலகளவில் இந்திய நாடு தகவல் தொழில்நுட்பத்தில் வேகமான வளர்ச்சிகண்டுள்ளது.
இந்த மாநாட்டில் வேளாண்மை வளர்ச்சி பொருளாதார கொள்கையில் மாற்றம் நிலையான வளர்ச்சி வேலை வாய்ப்புக்கான திறன் வளர்ப்பு உள்ளிட்டவை சம்மந்தமாக விவாதிக்க உள்ளீர்கள். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான இவைகள் சம்மந்தமாக நீங்கள் தீர்வு காண வேண்டும் என்றார்.