Skip to main content

ரத்தான குடியரசுத் தலைவரின் வருகை; கிண்டி மருத்துவமனை திறப்பில் திடீர் மாற்றம் 

Published on 12/06/2023 | Edited on 12/06/2023

 

Visit of the President of the Republic; Sudden change in opening of Kindy Hospital

 

சென்னை கிண்டியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை வரும் ஜூன் 15 ஆம் தேதி திறந்து வைக்கப்படும் எனத் தமிழக அரசு தெரிவித்திருந்தது. 240 கோடி ரூபாய் மதிப்பில் இந்த மருத்துவமனையானது ஆயிரம் படுக்கைகள் கொண்ட வசதிகளுடன் உயர் சிறப்பு மருத்துவமனையாக அமைகிறது. மருத்துவமனையில் சிறுநீரகவியல், இருதயவில், நரம்பியல், மயக்கவியல் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட துறைகளின் கீழ் சிறப்பு மருத்துவமனை செயல்படுகிறது.

 

249 ரெகுலர் மற்றும் 508 அவுட்சோர்சிங் எனப்படும் ஒப்பந்த அடிப்படை என மொத்தம் 757 பணியாளர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். மருந்தாளுநர்கள், செவிலியர்கள், உளவியல் நிபுணர்கள் இந்த மருத்துவமனையில் பணியமர்த்தப்பட இருக்கிறார்கள். 60 செவிலியர்கள், 30 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.  

 

இந்த மருத்துவமனையைத் திறந்து வைக்கும் நிகழ்வில் இந்திய குடியரசுத் தலைவர் கலந்து கொள்வார் என முன்னதாக அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில், குடியரசுத் தலைவரின் தமிழக வருகை திடீரென ரத்தானதால் தமிழக முதல்வரே இந்த மருத்துவமனையைத் திறந்து வைக்க இருப்பதாகத் தற்பொழுது தகவல் வெளியாகி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்