Skip to main content

 மாட்டு வண்டி மணல் குவாரிக்காக  கனிம வளத்துறை அலுவலகம் முற்றுகை!  தொழிலாளர்கள் எச்சரிக்கை! 

Published on 07/12/2018 | Edited on 07/12/2018
t

 

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில்,  ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாட்டுவண்டி தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.  இவர்களின் வாழ்வாதாரத்தை காத்திடவும், கட்டுமான தொழிலாளர்களின் வறுமையை போக்கவும், மாட்டு வண்டி மணல் குவாரி அமைக்க கோரி, அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும்,  பல கட்டப் போராட்டங்கள் நடத்தியும்,  தமிழக அரசானது,  எவ்வித நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.

 

 இதனால் விருத்தாச்சலம் பாலக்கரையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட  மாட்டுவண்டி தொழிலாளர்களுக்காக, அரசு மணல் குவாரி அமைக்க, தமிழக அரசை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தமிழக அரசானது தங்களது கோரிக்கைகளை ஏற்காவிட்டால், கடலூர், விழுப்புரம் மாவட்ட மாட்டு வண்டி தொழிலாளர்களை ஒன்று திரட்டி, கனிம வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.


 

சார்ந்த செய்திகள்