Skip to main content

முதல்வருக்கு பேனா பரிசளித்த சிறுமி - வைரல் வீடியோ

Published on 02/02/2023 | Edited on 02/02/2023

 

nn

 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணங்களின்போது பொதுமக்களிடம் மனுக்களை வாங்குவது, வாக்கிங் செல்லும் பொழுது பொதுமக்களுடன் உரையாடுவது தொடர்பான வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகும். அந்த வகையில் அண்மையில் சிறுமி ஒருவர் முதல்வருக்கு பேனாவை பரிசளிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

முதல்வர் வரும் வாகனத்தை நோக்கி சிறுமி ஒருவர் நின்றிருக்க, அருகிலிருந்தவர்கள் “முதல்வர் வந்துவிட்டார், போ.. போ..” என்று அனுப்பி வைத்தனர். உடனடியாக அந்த மாணவி முதல்வரிடம் தான் வைத்திருந்த பேனாவை பரிசாக அளித்தார். பேனாவை முதல்வர் பெற்றுக்கொண்ட சந்தோஷத்தில் அச்சிறுமி செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்தப் பேனாவை கலைஞர் தாத்தாவின் நினைவிடத்தில் வைக்கச் சொன்னேன்” எனத் தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்