Skip to main content

விநாயகர் சதுர்த்தி விழா கட்டுப்பாடு - இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!

Published on 03/09/2021 | Edited on 03/09/2021

 

ரத

 

விநாயக சதுர்த்தி விழா வருகிற 10-ந் தேதி நடைபெற உள்ளது. ஒவ்வொரு வருடமும் இந்து முன்னணி, பா.ஜ.க., சார்பில் விநாயகர் சிலைகளை பொது இடத்தில் வைத்து பிறகு நான்கைந்து நாட்களுக்குப் பிறகு ஊர்வலமாக சென்று நீர் நிலைகளில் கரைப்பார்கள். ஈரோடு மாநகர் பகுதியில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு பின்பு அனைத்து விநாயகர் சிலைகளும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கருங்கல்பாளையம் காவிரி  ஆற்றங்கரையில் கரைக்கப்படும். இந்த நிலையில் இந்த ஆண்டு கரோனா வைரஸ்  தாக்கம் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடக் கூடாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

 

இதற்கு இந்து முன்னணியினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். மேலும் விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்த கோரி 2 ந் தேதி தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்திருந்தனர். அதன்படி ஈரோடு இந்து முன்னணி சார்பில் பெரிய மாரியம்மன் கோவில் முன்பு விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற வலியுறுத்தி சூடம் ஏற்றி வழிபட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதன் நிர்வாகிகள் ஈடுபட்டனர். அந்த அமைப்பின் மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமை தலைமையில் மாவட்ட பொதுச்செயலாளர் சக்தி முருகேஷ் முன்னிலையில் நடைபெற்றது. அதே போல் திண்டல் வேலாயுதசாமி கோவில் முன்பு, பெரியவலசு வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம், கோபி, பெருந்துறை சத்தியமங்கலம் என மாவட்டம் முழுவதும் இந்து முன்னணியினர் கோவில்கள் முன்பு இப்போராட்டத்தை நடத்தினார்கள். 
 

 

சார்ந்த செய்திகள்