Skip to main content

அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் பறிமுதல்...

Published on 23/08/2020 | Edited on 23/08/2020
villupuram tindivanam

 

விழுப்புரம் மேல் அனுமார் கோவில் தெருவில் வசிப்பவர் தியாகராஜன். இவர் பாஜக மாநில செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் நேற்று காலை 10 மணியளவில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஒரு விநாயகர் சிலையை அவரது வீட்டு வாசலின் முன் வைத்துவழிபாடு செய்வதற்காக கொண்டு வந்து வைத்தார். தகவலறிந்த டிஎஸ்பி பொறுப்பு ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் தியாகராஜன் வீட்டுக்கு வந்து சிலையை வீட்டிற்குள் எடுத்துவைத்து வழிபட வேண்டும். வீட்டிற்கு வெளியே வைக்கக்கூடாது என்று கூறியுள்ளார்.

 

அப்போது அங்கு வந்த பாஜக மாவட்ட தலைவர் கலிவரதன், விவசாய அணி செயலாளர் கோவிந்தராஜ், ஆர்எஸ்எஸ் பிரமுகர் நரசிம்மன் ஆகியோர் டிஎஸ்பியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அரசு விதிமுறை படியே விநாயகர் சிலையை வீட்டுக்குள்ளேயே வைத்து வழிபடுவதாக நிர்வாகிகள் ஒப்புக்கொண்டனர். அதன்பேரில் போலீசார் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. திண்டிவனத்திலும் போலீசார் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தடையை மீறி வைக்கப்பட்ட 5 விநாயகர் சிலைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

 


 

சார்ந்த செய்திகள்