விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை நோய் பாதிப்பு ஏற்பட்டவர்கள் 1820. இதில் 1627 பேர் நோய் குணமாகி சென்றுவிட்டனர். இதுவரை நோய் பாதிப்பினால் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் நான்கு பேர் இறந்துள்ளனர். ஒரே நாளில் நான்கு பேர் உயிரிழந்துள்ளது மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது 187 சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்ட அமைச்சர் சிவி சண்முகம், மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சமீபத்தில் நோய்த்தடுப்பு சம்பந்தமாக ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டம் நடத்தினார்கள்.
மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மருத்துவ குழுவினர் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி ஆகிய பகுதிகளில் நோய் பரவிய பகுதிகளுக்குச் சென்று தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தனர். இன்று ஒரே நாளில் நான்கு பேர் இறப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மருத்துவ குழுவினர் இன்னும் தீவிர கவனம் செலுத்த வேண்டும். அதோடு சித்த மருத்துவத்தை மிக அதிக அளவில் பயன்படுத்த வேண்டும். மேலும் மருத்துவமனைகளில் தங்கவைக்கப்பட்டு நோயாளிகளுக்கு இன்னும் தரமான உணவுகள் வழங்கப்பட வேண்டுமென்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. எனவே மாவட்ட ஆட்சியர் உட்பட அனைத்து அதிகாரிகளும் மருத்துவ குழுவினரும் இன்னும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.