
தேமுதிக தலைவர் விஜயகாந்த் குடும்பத்தினருடன் அமெரிக்காவில் உள்ளது போன்ற புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றன.

கடந்த சில மாதங்களாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொண்டை வலி காரணமாக பொது இடங்களில் பேசாமல் தவிர்த்து வந்தார். இந்தநிலையில் அவருக்கு அமெரிக்காவில் மேல் சிகிச்சை மேற்கொள்ள குடும்பத்தினர் முடிவு செய்து, கடந்த மாதம் 7ம் தேதி அமெரிக்கா புறப்பட்டு சென்றனர். அமெரிக்கா சென்ற விஜயகாந்த் அங்கு 40 நாட்கள் தங்கி சிகிச்சை பெறுவார் என்று கூறப்பட்டது.
அவருக்கு தைராய்டு, குரல் வளம் குறித்த பிரச்சனைகள் இருப்பதால் அவற்றை குணமாக்கவும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்களின் கண்காணிப்பில் வைத்து அதன் பிறகு சென்னை திரும்புவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பின்னர் தற்போது அமெரிக்காவில் விஜயகாந்த் அவரது மனைவி மற்றும் மகனுடன் உள்ளது போன்ற புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றன. விஜயகாந்த் புகைப்படத்தை பார்த்த தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.