Skip to main content

விஜயகாந்தின் கால் விரல்கள் அகற்றம்! - தேமுதிக அறிக்கை

Published on 21/06/2022 | Edited on 21/06/2022

 

Vijayakanth medical condition

 

காலில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் கால் விரல்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

 

நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த், உடல் நலக்குறைவால் தீவிர அரசியலில் இருந்து விலகி இருக்கிறார். கட்சி நடவடிக்கைகளை அவரின் குடும்பத்தினர் கவனித்துக்கொள்கிறார்கள். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில்கூட அவர் போட்டியிடவில்லை. விஜயகாந்த், மருத்துவ பரிசோதனைக்காகச்  சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சமீபத்தில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் அவரது காலிலிருந்து 3 விரல்கள் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

 

அவரது காலில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததன் காரணமாக அறுவை சிகிச்சை செய்து 3 விரல்கள் அகற்றப்பட்டதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தேமுதிக தலைமைக் கழகமும், கால் விரல்கள் அகற்றப்பட்டது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்