பிகில் படத்தில் வாங்கிய சம்பள விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய் வீடுகளில் இரண்டு நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இது குறித்து இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் விமர்சனம் செய்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை அடுத்த உடன்குடியில் குடியுரிமைச் சட்ட ஆதரவுக் கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் சம்பத்திடம் விஜய் வீட்டு ரெய்டு குறித்து கேட்டபோது, ’’சினிமா துறையினர் திரைப்படங்களில் மட்டும் தங்களை நல்லவர்களாகக் காட்டிக்கொண்டு பஞ்ச் டயலாக் பேசுகிறார்கள். உண்மையில் விஜய் வருமான வரி ஏய்ப்பு செய்கிறார்கள். பேசுவது பஞ்ச் டயலாக்.. செய்வது வரி ஏய்ப்பு.. ஆனால், ரஜினி வருமான வரி ஏய்ப்பு செய்பவரல்ல. ரஜினி நேர்மையாக வருமான வரி செலுத்துபவர் என வருமான வரித்துறையால் சான்று வழங்கப்பட்டுள்ளது ’’என்று கூறியுள்ளார்.
சி.ஏ.ஏ. விவகாரத்தில் ரஜினி பேசியது குறித்த கேள்விக்கு, ‘’ரஜினி உண்மையை பேசியிருக்கிறார்’’என்று தெரிவித்துள்ளார்.