கோவில்பட்டி வந்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்ராஜூவை செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது அவர், ‘’ தீபாவளிக்கு முன்னதாக அனைத்து திரையரங்குகளிலும் ஆன்லைன் டிக்கெட் கொண்டுவரப்படும்’’என்று தெரிவித்தார்.
அவரிடம், பிகில் இசை வெளியீட்டு விழாவில் பேனர் கலாசாரத்திற்கு எதிராக விஜய் பேசியது குறித்து கேள்வி எழுப்பியபோது, ’’படம் ஓடுவதற்காக நடிகர் விஜய் பரபரப்பாக பேசுகிறார்’’என்று கூறினார்.
மேலும், சுபஸ்ரீ விவகாரத்தில், எங்க பேனர் வைக்கணும், வைக்கக்கூடாதுன்னு கூடவா தெரியாது. இவங்களைப்போன்ற அலட்சிய அதிகாரிகளாலும் அரைவேக்காட்டு அரசியல்வாதிகளாலும் இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோகப்போகின்றதோ? என்று கமல்ஹாசன் பேசியுள்ளது குறித்து எழுப்பிய கேள்விக்கு, ‘’அரசியல்வாதிகளை அரைவேக்காடு என்று சொல்லும் கமல்ஹாசனும் அரைவேக்காடுதான்’’என்று கூறினார்.