Skip to main content

'மிக கனமழை...'-ஐந்து மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

Published on 13/10/2024 | Edited on 13/10/2024
 'Very heavy rain...'-alert for five districts

வடகிழக்கு பருவமழை நெருங்கி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இன்று (அக்.13) தமிழகத்தில் தஞ்சை, திருவாரூர், மதுரை, தேனி, விருதுநகர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதேபோல் இன்று சேலம், கோவை, திருப்பூர், நாகை, ஈரோடு, சிவகங்கை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நாளை (அக்.14) கனமழைக்கும் நாளை மறுநாள் (அக்.15) மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 16ம் தேதி வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களிலும், அக்டோபர் 17 திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சென்னை, காஞ்சிபுரம், தர்மபுரி, சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படியாக தமிழகத்திற்கு அக்டோபர் 17ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சார்ந்த செய்திகள்