தமிழ்நாட்டில் உள்ள மின் நுகர்வோர்களுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்காக, மீட்டர்களைக் கொள்முதல் செய்வதற்காகக் கொடுக்கப்பட்ட சர்வதேச டெண்டரை, தமிழக மின்சார வாரியம் ரத்து செய்துள்ளது.
மத்திய அரசின் நிதியுதவிடன், தமிழ்நாட்டில் உள்ள மின் நுகர்வோர்களுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொறுத்தப்படும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு, பல ஆண்டுகளாக டெண்டர் விடப்படக் கூடிய பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த டெண்டரில், முன்னணி தொழிலதிபரான அதானி நிறுவனம் உள்பட 4 நிறுவனங்கள் பங்கேற்று இருந்தது.
இதில், அதானி நிறுவனம் உள்பட 4 நிறுவனங்களும் குறிப்பிட்டு இருந்த தொகை, தமிழ்நாடு மின்வாரிய பட்ஜெட்டுக்கு அதிகமாக இருந்ததால், அந்த டெண்டரை தமிழக மின்சார வாரியம் ரத்து செய்துள்ளது. ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் தொடர்பாக மீண்டும் டெண்டர் விடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.