சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வெண்டிலேட்டர் கோளாறால் இரண்டு கரோனா நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 82 கரோனா நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிற நிலையில், நேற்று வெண்டிலேட்டரில் ஏற்பட்ட கோளாறால் நேற்று நள்ளிரவு 12.20 மணிக்கு ஆக்சிஜன் சப்ளையில் தடைபட்டுள்ளது. இதனால் போதிய பிராண வாயு வராததால் 60 வயது ஆண் நோயாளியும், 50 வயது பெண் நோயாளியும் உயிரிழந்துள்ளனர். வெண்டிலேட்டர் கோளாறால் நடந்த இந்த உயிரிழப்பு சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையின் டீன் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆக்சிஜன் சப்ளையில் மாறுபாடு இருந்ததே தவிர ஆக்சிஜன் இணைப்பு தடைப்படவில்லை. ஆக்சிஜன் குறைந்திருந்தால் அனைத்து நோயாளிகளும் இறந்திருப்பார்கள். இது தவறான தகவல் என டீன் தெரணி ராஜன் தெரிவித்துள்ளார்.