வெங்கைய நாயுடுவுக்கு அன்புமணி வாழ்த்துக்கள்!
பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை :
’’குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று 15-ஆவது குடியரசுத் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள வெங்கையா நாயுடுவுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய வரலாற்றில் கே.ஆர். நாராயணனுக்குப் பிறகு தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒருவர் குடியரசுத் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அறிவார்ந்த மூத்தவர்கள் அவையான மாநிலங்களவையின் தலைவராக பொறுப்பேற்கவுள்ள வெங்கய்யா நாயுடு நாடாளுமன்ற ஜனநாயகத்தையும், மாண்பையும் காக்க பாடுபடுவார் என்று நம்புகிறேன். அவர் மேலும் உயரத்திற்கு செல்ல வாழ்த்துக்கள்! ’’