வேலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கசிவு!
வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனையில் ஆக்சிஜன் கசிவு ஏற்பட்டதால் நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர்.
வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனையின் 2வது மாடியில் உள்ள அறுவை சிகிச்சை வார்டில் ஆக்சிஜன் கசிவு ஏற்பட்டது. இதனையடுத்து அந்த வார்டில் இருந்த நோயாளிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
பின்னர் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் விரைந்து ஆக்சிஜன் கசிவை சரி செய்ததையடுத்து நோயாளிகள் மீண்டும் வார்டுக்கு திரும்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.