வேலூர் மாவட்டம் ஆம்பூர் கன்கார்டியா ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் கடந்த 1985-- 87ஆம் கல்வியாண்டில் பயின்ற வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, கன்னியாகுமரி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களை சேர்ந்த 40 பேர் பயின்றுள்ளனர். படித்து முடித்த அவர்கள் தற்போது பல்வேறு இடங்களில் ஆசிரியர், ஆசிரியையாக பணியாற்றி வருகின்றனர்.
அவர்கள் படித்து முடித்து அந்த கல்லூரியையும், உடன் படித்தவர்களையும் பிரிந்து 32 ஆண்டுகள் கடந்துவிட்டது. இந்நிலையில் தற்போதைய டெக்னாலஜி யுகத்தில் அனைவரும் செல்போன், வாட்ஸ்அப் வழியாக தங்களுக்குள் சிலர் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு கல்லூரி கால வாழ்க்கையை பற்றி பேசிவந்துள்ளனர்.
இந்த நிலையில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு மாணவர்கள் ஒன்று சேர திட்டமிட்டுள்ளனர். ஒருவருக்கொருவர் தொடர்புகளை ஏற்படுத்தி 40 பேருக்கும் தகவல் அனுப்பியுள்ளனர். அவர்கள் அனைவரும் மே 12ந்தேதி காலை தாங்கள் படித்து கல்லூரியில் குடும்பத்தோடு வந்து சேர்ந்தனர். 40 பேரில் 36 பேர் மட்டுமே வந்துள்ளனர். மீதி 4 பேர் மரணித்துவிட்டதால் அவர்கள் வரவில்லையாம்.
மறைந்த தங்களது நண்பர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு அப்போது தங்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர்களான தம்பையா மற்றும் ஜெயக்குமார் ஆகிய இருவரும் சிறப்பு அழைப்பாளராக வரவழைத்து, அவர்களிடம் ஒவ்வொருவரும் தங்களை பற்றியும், தங்கள் குடும்பம் பற்றியும் கூறி ஆசி வாங்கியுள்ளனர்.
இந்த முன்னாள் மாணவர்கள் குழு, கண்கார்டியா அரசு துவக்க பள்ளிக்கு சுமார் 10 ஆயிரம் மதிப்பிலான பீரோ மற்றும் நாற்காலிகள் வழங்கியுள்ளனர். 3500 ஆசிரியர்களை உருவாக்கிய அந்த பயிற்சி நிறுவனம் தற்போது, அங்குள்ள நிர்வாகத்தினரோடு கலந்தாலோசனை செய்து, நடத்த ஏற்பாடு செய்யலாம் எனக்கூறியுள்ளதாக தெரிகிறது.