Published on 16/04/2019 | Edited on 16/04/2019
வேலூர் தொகுதியின் மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதே நேரம் குடியாத்தம், ஆம்பூரில் இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்து நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் திமுகவினர் வீடுகளில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து வேலூர் மக்களவை தேர்தலை ரத்து செய்யவேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று வேலூர் தொகுதி தேர்தலை ரத்து செய்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.