Skip to main content

வாகன விபத்துக்களை குறைப்பதற்காகவே அசல் ஓட்டுநர் உரிமம்: தமிழக அரசு

Published on 08/09/2017 | Edited on 08/09/2017
வாகன விபத்துக்களை குறைப்பதற்காகவே அசல் ஓட்டுநர் உரிமம்: தமிழக அரசு

வாகன விபத்துக்களை குறைப்பதற்காகவே அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மோட்டார் வாகனச் சட்டத்தில் அசல் ஓட்டுநர் உரிமம் பற்றிய விதி எதுவும் இல்லை என்று மனுதாரர் கூறியிருந்தார். இதற்கு தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், மோட்டார் வாகனச் சட்டப்படி ஏற்கனவே இருக்கும் விதிகளின் அடிப்படையில் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

விபத்துகளை குறைப்பதற்காக அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வலியுறுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ள தமிழக அரசு, ஜூலை மாதம் வரை 32 ஆயிரம் விபத்துகள் ஏற்பட்டு 9 ஆயிரத்து 881 பேர் உயிரிழந்து இருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவிலேயே அதிக விபத்துகள் நடக்கும் மாநிலங்களில் தமிழகம் 2வது இடத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ள தமிழக அரசு, இதனைத் தவிர்க்கவே, அசல் ஓட்டுநர் உரிமம் கேட்கப்படுகிறது என விளக்கம் அளித்துள்ளது.

சார்ந்த செய்திகள்