வசூல்ராஜா குட்கா புகழ் விஜயபாஸ்கர் டெங்கு காய்ச்சலிலும் மாமூல் வாங்குகிறாரா? ஸ்டாலின்
‘குட்கா விவகாரத்தில் மாமூல் வாங்கியதுபோல், டெங்கு காய்ச்சல் விவகாரத்திலும் அமைச்சர் மாமூல் வாங்குகிறாரா என்று சந்தேகம் வந்துள்ளது’ என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் இன்று (27-09-2017) செய்தியாளர்களை சந்தித்தார்.
செய்தியாளர்: டெங்கு காய்ச்சலை கட்டுபடுத்திவிட்டதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கூறிவரும் நிலையில், டெங்குவினால் மரணங்கள் ஏற்பட்டுள்ளதே?
ஸ்டாலின்: ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் - குட்கா புகழ்’ மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களிடம் சென்று கேளுங்கள். களப்பணியாளர்களை நியமித்துவிட்டோம், கட்டுப்படுத்திவிட்டோம், தவறான பிரசாரங்களை நம்பாதீர்கள் என்று அவர் சொல்வதெல்லாம் சுத்த ஹம்பக் (Humbug), அவ்வளவும் பொய். எப்படி குட்கா விவகாரத்தில் தொடர்ந்து மாமூல் வாங்கிக் கொண்டிருக்கிறார்களோ, அதேபோல் இந்த நோய் பரவுவதற்கும் ஏதாவது மாமூல் வாங்குகிறார்களா என்ற சந்தேகம் இப்போது வந்திருக்கிறது. இவ்வாறு கூறினார்.