Published on 02/09/2022 | Edited on 02/09/2022
பணப்பரிவர்த்தனை டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில் யுபிஐ மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் நடைமுறை அதிகரித்து வருகிறது. அண்மையில் சென்னையில் வாகன போக்குவரத்து தொடர்பான அபராதங்களை பேடிஎம் மூலம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் ரேஷன் கடைகளில் யுபிஐ மூலம் பணப்பரிமாற்றம் செய்ய தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் யுபிஐ வசதி கொண்ட 10 மாதிரி ரேஷன் கடைகளை தமிழக அரசு ஏற்படுத்த இருக்கிறது. இந்த மாதிரி கடைகளின் செயல்பாடுகளை கொண்டு மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் யுபிஐ வசதியுடன் கூகுள் பே, போன் பே, பேடிஎம் மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி கொண்டுவரப்படும் என தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.