பொதுவிநியோக முறையை சீர்குலைக்கும் மத்திய அரசு: மார்க்சிஸ்ட் கண்டனம்
தமிழ்நாடு அரசு பொதுவிநியோக முறையில் வழங்கப்படும் சர்க்கரையின் விலையை நவம்பர் 1-ந் தேதி முதல் ரூ. 13.50லிருந்து ஏறத்தாழ 100 சதவிகிதம் உயர்த்தி ரூ.25க்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த விலை உயர்வை வன்மையாக கண்டிக்கிறது. இதனை திரும்ப பெற வலியுறுத்துகிறது என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசின் நிர்ப்பந்தத்திற்கு பணிந்து உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்துவது என்று முடிவெடுத்த போதே ரேசன் பொருட்களுக்கும்இ அதன் பிறகு ரேசன் கடைகளுக்கும் மூடுவிழா நடத்துவதுதான் மத்திய பாஜக அரசின் கொள்கை என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டியிருந்தது. 2015ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பிறகு பெரும்பாலான ரேசன் கடைகளில் தமிழ்நாடு அரசின் சிறப்பு பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த துவரம்பருப்புஇ உளுந்தம்பருப்புஇ பாமாயில் ஆகியவை முழுமையாக நிறுத்தப்பட்டுவிட்டன. இப்போது சர்க்கரையின் விலையை சந்தை விலைக்கு நெருக்கமாக கொண்டு வந்து விட்டார்கள். 59இ780 ஆயிரம் கிலோ லிட்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டு தமிழகத்திற்கு கிடைத்துக் கொண்டிருந்த மண்ணெண்ணெய்யின் அளவை 10 ஆயிரம் கிலோ லிட்டராக மத்திய அரசு குறைத்துவிட்டது. இதேபோன்று அரிசியும் கூட தமிழகத்தில் உள்ள ரேசன் கார்டுகளில் 50 சதவிகிதம் பேருக்கு மட்டுமே கொடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துவிட்டது. பொதுவிநியோக முறையில் பொருட்களை பெறும் உரிமையை மறுப்பதற்கான குடும்பங்களை வகைப்படுத்தும் வேளை தான் நடந்து கொண்டிருக்கிறது. ஸ்மார்ட் கார்டுகளில் சூஞழழ என வகைப்படுத்தப்பட்டுள்ள யாருக்கும் ரேசன் பொருட்கள் கிடைக்காது. எப்போது என்பது தான் இப்போதுள்ள பிரச்சனை.
மத்திய அரசின் நிர்ப்பந்தத்திற்கு ஆட்பட்டு தமிழகத்தில் ஏழைஇ எளிய மக்கள் பயன்படுத்தும் ரேசன் பொருட்களின் விலை உயர்வை உடனடியாக கைவிட வேண்டுமென மாநில அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
அக்டோபர் 31 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மாநில அளவில் நடைபெறவுள்ள கண்டன இயக்கத்தில் மத்திய அரசின் இந்த பொதுவிநியோக முறையை சீர்குலைக்கும் முடிவை எதிர்த்தும் குரலெழுப்புமாறு கட்சி அணிகளை மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு கூறியுள்ளார்.