Published on 22/11/2020 | Edited on 22/11/2020

சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் தமிழக ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று மதியம் சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அரசு நிகழ்ச்சிகள், முக்கிய தலைவர்கள் உடனான சந்திப்பு, பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றிருந்தார். இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கு பின்னர் இன்று காலை 09.30 மணிக்கு தனிவிமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார்.