உதயசந்திரன் பெரிய உலக தலைவர் அல்ல, ஒரு செயலாளரை எந்த துறைக்கு வேண்டுமானாலும் மாற்றலாம் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார் செங்கோட்டையன். அப்போது அவர், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் மாற்றங்களை உருவாக்கி வருகிறார்கள். தமிழகத்தின் அனைத்து துறைகளும் இந்தியாவுக்கு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. வளர்ந்து வரும் விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் தலா ரூ.20 லட்சம் மதிப்பில் அடுத்த மாத இறுதிக்குள் 60 பள்ளிகளில் ஆய்வகங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும். அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் மீது பாலியல் புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பள்ளிகல்வி துறை இயக்குநராக இருந்தவரை இடம் மாற்றம் செய்ய ஏதும் காரணம் உண்டா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு உதயசந்திரன் என்பவர் பெரிய உலக தலைவர் அல்ல. ஒரு செயலாளரை எந்த துறைக்கு வேண்டுமானாலும் மாற்றலாம் என்று பதில் கூறினார்.